முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி: அமெரிக்கா தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - வடகொரியா நடத்திய புதிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகையில் , "வடகொரியாஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் இச்சோதனை சில மணி நிமிடங்களிலே தோல்வியில் முடிந்தது" என்று செய்தி வெளியிட்டது. வடகொரியா அந்நாட்டின் கிழக்கு பகுதியின் கல்மா எனும் இடத்தில் நேற்று நடத்திய சோதனை தோல்வியில் முடிந்தது என்பதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை பற்றி தென்கொரிய பாதுகாப்புத் துறை தரப்பில்,

"அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு வட கொரியா  நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக வடகொரியா கடந்த ஆண்டு இறுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. இதற்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. வடகொரியா மீது ஐ.நா.சபை சார்பில் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வடகொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்