முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்: 33 பேர் பலி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்   - வடக்கு சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் பலியாகினர்.  இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணைய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறியபோது, "சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 33 பேர் பலியாகினர். சண்டை காரணமாக அப்பகுதியிலுள்ள குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகிறோம்" என்றார்.

அமைதிப் பேச்சுவார்த்தை
சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அரசுப் படைகளும், அமெரிக்க படைகளும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இதன் காரணமாக ஐ.எஸ் பகுதியில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகிவருவது தொடர்பாக ஐநா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தத் தொடர்ந்து ஐநா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, சண்டையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்