முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் எதிரிகள் கொலையில் தொடர்பில்லை பொன்சேகா புகாருக்கு கோத்தபய ராஜபக்சே மறுப்பு

புதன்கிழமை, 22 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு  - அரசியல் எதிரிகள் கொலையில்  தமக்கு  தொடர்பில்லை என்று  கோத்தபய ராஜபக்சே மறுப்பு  தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2005 முதல் 2015 வரை மகிந்தா ராஜபக்சே அதிபராக பதவி வகித்தார். அப்போது பல்வேறு நிதி முறை கேடுகள் நடைபெற்றது, 17 பத்திரிகையாளர்கள் உட்பட அரசியல் எதிரிகள் கொல்லப் பட்டது தொடர்பாக, ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப உறுப் பினர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் மறுத்து வருகின்றனர்.

பொன்சேகா சாட்சியம்
இதனிடையே, இந்த வழக்கில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதில், “ராணுவ உளவு அமைப் பின் சார்பில் மரணப் படை (டெத் ஸ்குவாட்) இயங்கி வந்தது. இந்தப் படையினர் அரசியல் எதிரிகள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொலை செய்தனர். இதற்கான உத்தரவுகளை முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார்” என கூறியுள்ளார்.

கோத்தபய மறுப்பு 
இதுகுறித்து கோத்தபய கூறும் போது, “பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொன்சேகா கூறுவது போல் மரணப் படை செயல்பட்டது உண்மையானால், ராணுவ தளபதி என்ற வகையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

புலனாய்வுத்துறை அறிக்கை
குற்றப் புலனாய்வுத் துறையும் தனது அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அதிலும் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மரணப் படைக்கு தொடர்பு இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 2009-ல் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா கொலை வழக்கிலும் மரணப் படைக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆயுத கொள்முதலில் கோத்தபய லஞ்சம் வாங்கிய தாக, லசந்த விக்கிரமதுங்கா தனது பத்திரிகையில் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவர் கொல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago