முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு : தேர்தல் ஆணையத்தை அணுக ஐகோர்ட் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கு விசாரணையையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்த வைத்துள்ளது.

டிடிவி.தினகரன் அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

தினகரனுக்கு எதிராக வழக்கு

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடவேண்டும்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் நடத்தை விதியை திருத்த வேண் டும். வழக்கில் தொடர்பு இருந்தாலோ அல்லது வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் விதிக்கப்பட் டாலோ தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.  தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளகூடாது எனவும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு ஜோசப் தனது மனுவில் குறிப்பிட் டிருந்தார்

தேர்தல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்  அந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுகவேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் இந்த வழக்கு விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்