முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 6 ஆண்டுகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறப்பு: கூட்டுறவு அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை   - தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளில், ஏழை எளிய மக்களின் நலன் கருதி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளை திறந்து வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.  சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்  செல்லூர் கே. ராஜூ, கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தது முதல் இதுவரை ஆயிரத்து 558 பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதேபோல், 638 முழுநேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 2,348 கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திருச்சி மாவட்டம் சலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஆர். பாளையம் காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மேம்படுத்த நடப்பாண்டில் 37 புள்ளி நான்கு பூஜியம் லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்