முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமுல் : மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

புதன்கிழமை, 22 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  இந்தியாவில் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  டெல்லியில் காமன்வெல்த் நாடுகளின் ஆடிட்டர் ஜெனரல்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இந்தியாவில் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் வரி செலுத்தவில்லை என்ற புகார் அதிக அளவில் உள்ளது. அதனால்தான் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டது. பண பரிவர்த்தனை செய்தால் வரி ஏய்ப்பு செய்யலாம் என்ற மக்களின் மனப்போக்கை மாற்றவும் தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும்தான் இந்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமுல்படுத்தியவுடன் நாட்டிலேயே இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக மாறுவதோடு பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும்.

சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7முதல் 8 சதவீதம் வரை இருக்கும். உலகத்திலேயே அதிக பொருளாதார வளர்ச்சி நாடாக இந்தியா நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மாநில அளவில் வங்கிகளின் மோசமான நிலைமை, தனியார் முதலீட்டை அதிகரிக்க செய்யும் சவால்களை இந்தியா இன்னும் எதிர்நோக்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டால் மறைமுகமாக நடக்கும் சரக்கு மற்றும் சேவை குறையும். அதோடுமட்டுமல்லாது வரி ஏய்ப்பு செய்யாமல் இருக்க தகவல் தொழில்நுட்பத்துறையானது ஒரு முதுகெலுப்புபோன்று செயல்படும் என்றும் அமைச்சர் அருண்ஜெட்லி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்