முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

புதன்கிழமை, 22 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர்மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக  அப்பீல் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடக்கிறது.   1992-ம் ஆண்டு அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர்மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி,உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி உள்பட பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கீழ் கோர்ட்டு விசாரணை முடிவில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரமை நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எப்.நாரிமன், தீபக் குப்தா  ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதி பி.சி கோஷ் தெரிவித்தார். 

இந்த வழக்கு விசாரணையானது விசாரணை கோர்ட்டில் இருக்கிறது. இது எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒருவார கால அவகாசம் வேண்டும் என்று ஹஜி மேக்பூப் அகமது சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மனுமூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் பா.ஜ.க.தலைவர்கள் சார்பாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் வேணுகோபால், இந்த வழக்கு தொடர்பாக பல பைல்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை 4 வாரம் கழித்து தொடங்க வேண்டும் என்றார். கடந்த 1992-ம் ஆண்டு  பிரச்சினைக்குரிய ராமர்ஜென்மபூமியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் சதி நடந்ததாக தொடர்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 6-ம் தேதியே ஆய்வு செய்ய சுப்ரீம்கோர்ட்டு முடிவு செய்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யவும் கோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த இரண்டு வழக்குகளில் வெவ்வேறான பெயர்கள் உள்ளன. அதுவும் தனித்தனியாக இரண்டு விசாரணை கோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரணையை தொடங்கினால் அது ஆரம்பமாக இருக்கும் என்றும் வழக்கறிஞர் மேலும் கூறினார்.

சதிவழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும்  விசாரணை ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் தொடர்ந்து  நடந்து வருகிறது. மற்றொரு வழக்கு விசாரணை லக்னோ கோர்ட்டில் நடந்து வருகிறது. அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது அதை சுற்றிலும் அறிமுகம் இல்லாத கரசேவகர்கள் இருந்ததாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நடந்த கரசேவையின்போது பாபர்மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அத்வானி, ஜோஷி உள்பட 19 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து அகமத் மற்றும் சி.பி.ஐ. சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்