முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை : சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - வெளிமாநிலங்களில் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்,  தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மறைவு குறித்து எதிர்கட்சித்தலைவர்மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். . இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்.பில். ஆராய்ச்சி படிப்பு மாணவரான சேலம் மாவட்டம், அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் கடந்த 13 ம்தேதி இறந்துள்ளார் என்ற செய்தியை அறிந்தவுடன், துயரமுற்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தேன்.டில்லியில் வசந்த விஹார் காவல் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(1) (ஜ்)ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மறைந்த முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்ததிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ 3 லட்சம் நிவாரணம்
முத்துகிருஷ்ணனின் உடலை, அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, மறைந்த முத்துகிருஷ்ணனின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசால் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது.மறைந்த முத்துகிருஷ்ணனின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவருடயை குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயை வழங்க ஆணையிட்டேன்.மக்களவை உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மறைந்த முத்துகிருஷ்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினர்.

முத்துகிருஷ்ணன் இறப்பு தொடர்பான வழக்கு டில்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.மத்திய தரைவழி மற்றும் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மறைந்த முத்துகிருஷ்ணனின் உடலுக்கு சேலத்தில் உள்ள அவரது வீட்டுற்கு சென்று மரியாதை செலுத்தினார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சித் தலைவர் வெளி மாநிலத்திற்கு சென்று உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று இங்கே கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அரசு வெளிமாநிலத்தில் உயர்கல்வி படிக்கச் செல்கின்ற மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்