முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது - அமைச்சர் சம்பத் திட்டவட்டம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : விவசாயிகளுக்கு பாதிப்பு அளிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று நெடுவாசல் ஹைட்கார்பைடு பிரச்னை குறித்து தி.மு.க உறுப்பினர்கள் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

இத்தீர்மானத்திற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுக்க நெடுவாசல் கிராமத்திற்குட்பட்ட 10.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு 20 ஆண்டுகளுக்கு சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கக்கோரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் 30.12.2016 தேதியிட்ட விண்ணப்பத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் மத்திய அரசின் அறிவிப்பினை ஏற்க மறுத்து 16.2.2017 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

முதல்வருடன் சந்திப்பு ...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து முதல்வரை சந்திக்க நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர். அதனடிப்படையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் கடந்த 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மேற்படி திட்டத்தினால் அவர்களது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும், மேற்படி கிராமமானது காவிரி கடைமடை பகுதியில் அமைந்துள்ளதாலும், போதிய நீர் வரத்து இல்லாததாலும் அதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்துள்ளது என்றும் தெரிவித்து, இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.

குழுவினரிடம் உறுதி

போராட்டக் குழு பிரதிநிதிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே பிரதமரை நேரில் சந்தித்து நெடுவாசல் போராட்டம் குறித்தும், அத்திட்டத்தினால் மக்கள் அடைந்துள்ள அச்சம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததையும், அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கோ, அவர்களது வாழ்வாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு எவ்வித அனுமதியும் வழங்காது என்று உறுதி அளித்தார்.
போராட்டம் கைவிடப்பட்டது

தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், நெடுவாசல் கிராமத்தில் பெட்ரோலியப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமத்தை மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நெடுவாசல் மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். இவ்வாறு அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago