முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வெளியிட்டார்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்    25-வது  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை (ஒட்டுவில்லை) வெளியிட்டார்.25-வது உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கேப் பொறியியல் கல்லூரி, கேப் தொழிற்நுட்பக்கல்லூரி மற்றும் மாரல் ரிசோர்ஸ் அன்டு ரிசர்ச் பவுண்டேசன் இணைந்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை (ஒட்டுவில்லை) கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   வெளியிட்டு, பின்னர் அரசு வாகனங்களில் ஒட்டுவில்லைகளை ஒட்டி, தெரிவித்ததாவது:-நமது மாவட்டத்தில், இன்று உலக தண்ணீர்; தினம் கொண்டாடப்பட்டது.  இந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மழை பொய்த்ததை தொடர்ந்து, குடிநீரின் அவசியம் மற்றும் தண்ணீரினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இங்கு விழிப்புணர்வு ஒட்டுவில்லை வெளியிடப்பட்டது என தெரிவித்தார்.முன்னதாக, கலெக்டர்அவர்கள் தலைமையில், கேப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர், கேப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தண்ணீரின் அவசியம் மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், அவர்கள்; இருப்பிடத்திற்கே நேரிடையாக சென்று, ஒரு இலட்சம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, 5 இலட்சம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்கிறார்கள் என கல்லூரி நிர்வாகிகளால், கலெக்டர்அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)நிஜாமுதீன், இணை இயக்குநர் (வேளாண்மைதுறை) (பொ)  சந்திரசேனன் நாயர், கேப் பொறியியல் கல்லூரி தலைமை செயல் அலுவலர்  அருண்குமார், தாளாளர்  கோலப்பன், முதல்வர்  அழகேசன், மாரல் ரிசோர்ஸ் அண்டு ரிசர்ச் பவுண்டேசன் தலைவர்  விவேகானந்தன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்