முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் , ஆணையாளர் துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சியின் சார்பில் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை காந்தி மியூசியத்தில் ஆணையாளர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,    கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மழைநீரை சேமிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, இ.எம்.ஜி யாதவ பெண்கள் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி உள்ளிட்ட  கல்லூரிகளை சார்ந்த சுமார் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்திலிருந்து கோரிப்பாளையம், அரசு இராசாசி மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மீண்டும் காந்தி மியூசியத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் தண்ணீரிரை சிக்கனமாக பயன்படுத்துவது, மழைநீரை சேமிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திய படியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படியும்  சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது தெரிவித்ததாவது :

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சியின் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் இந்நிகழ்வு ஒரு தொடக்கம்தான். மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகள், 9 பேருராட்சிகள், 3 நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கோடை காலம் முழுவதும் இதுபோன்று தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மழைநீரை சேமிப்பது குறித்தும்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். தண்ணீர் என்பது திரவ தங்கம் (டுஐஞருஐனு புழுடுனு) போன்றது. தமிழக அரசின் அனைத்து துறைகள் மூலம் கால்வாய்கள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரினை சேமிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று பொதுமக்களும் தங்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதுடன் ஏற்கனவே உள்ள மழைநீர் சேமிப்புக்களை தெர்டர்ந்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்றார்.

ஆணையாளர் சந்தீப் நந்தூரி,  பேசும்போது தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முழுவதும் சுமார் 142 வருடங்களுக்கு முன்னால் கடும் வறட்சி ஏற்பட்டது. அதுபோன்று தற்பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை இல்லாத காரணத்தால் வறட்சி நிலைமை ஏற்படுகிறது. முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் தற்பொழுது தண்ணீர் அளவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு மழைநீரை சேமிப்பது குறித்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தேவையில்லாமல் நல்ல குடிநீரில் கை கழுவுதல், வாகனங்கள் கழுவுதல், விலங்குகளை குளிப்பாட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் கட்டமைப்புக்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும் பெரிய வளாகங்கள், பூங்காக்கள், குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் பெரிய மழைநீர் சேமிப்பு கட்டமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மாநகராட்சியின் மூலம் ஆலோசனை வழங்கப்படும். எனவே பொதுமக்கள் மழைநீரை சேமிப்பதுடன் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்றார்.

இந்த பேரணியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன்,   துணைஆணையாளர் திருமதி.செ.சாந்தி, உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, செல்லப்பா, அரசு, திருமதி.கௌசலாம்பிகை, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள் நாகராஜ், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்