முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ஆண்டுந்தோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை காப்பதும், நீர்வளத்தை பெருக்குவதும் தான் உலக தண்ணீர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலக தண்ணீர் தினம் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம் என்பதை ஒவ்வொரு மனிதனும் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் எதிர் வருகின்ற கோடைக்காலத்திற்கு தேவையான தண்ணீரை இப்போதிருந்தே சேமித்து பயன்படுத்திட வேண்டும்

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் இயற்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றன. இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் இதில் நெருப்பு மாசுபடுத்த இயலாது நிலம், நீர்,; காற்று ஆகாயத்தினை மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும். மனிதன் உயிர் வாழ்வதற்கு நிலம், காற்றை போன்று நீர்  மிகவும் அவசியமானதாகும். நாம் இயற்கைவளங்களை பாதுகாப்பதன் மூலம் நீர்வளத்தினை பாதுகாத்திட முடியும்.

நமது மாவட்டத்தில் கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை வராமல் இருப்பதை தவிர்த்திடும் பொருட்டு, தமிழக அரசு உத்தரவின்படி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு போதிய சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் பொதுமக்களிடையே தண்ணீர் சேமிப்பதன் அவசியம், நீர்நிலைகளை காப்பது மற்றும் நீர்வளத்தை பெருக்குவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். உலக தண்ணீர்தின பேரணி ராமநாதபுரம் அரண்மனையில் தொடங்கி, சாலைத்தெரு, வண்டிக்காரத் தெரு வழியாக பூமாலை வணிக வளாகத்தில் நிறைவு பெற்றது.  குடிநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து விளக்கிடும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அப்துல் ரஷீத், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ராஜா முகம்மது, டி.சரவணபாண்டியன் உள்பட மகளிர் திட்ட குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago