முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      நீலகிரி

ஊட்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ,சங்கர் தொடங்கி வைத்தார். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22_ந் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கிற்கேற்ப மழை நீர் சேமிப்பு குறித்தும், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, நீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டியில் இன்று(நேற்று) கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதே கருதிதை வலியுறுத்தி மாவட்டத்தில் கோலப்போட்டி, எழுத்தியக்கம் என போட்டிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் நீரின் அருமையை கருதி சிக்கனமாக பயன்படுத்தி மழைநீரை நல்லமுறையில் சேமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், கோட்டாட்சியர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வட்டாட்சியர் மகேந்திரன், நகராட்சி ஆணையாளர் டாக்டர் பிரபாகரன், நகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி லோயர்பஜார், மார்க்கெட், காபிஹவுஸ், கமர்சியல்சாலை, சேரிங்கிராஸ், பூங்கா சாலை வழியாக மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தை அடைந்தது. பேரணியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்