முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி அருகே கவுந்தப்பாடியில் உலக தண்ணீர் தின விழா

புதன்கிழமை, 22 மார்ச் 2017      ஈரோடு

கோபி அருகே கவுந்தப்பாடியில் உலக தண்ணீர் தின விழா நடைபெற்றது

          ஈரோடு அருகேயுள்ள கவுந்தப்பாடியில் மாவட்ட உழவர்விவாத குழு கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சபை பகிர்மான கமிட்டி சார்பில் உலக தண்ணீர் தின விழா கே.ஆர்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. பி.ஆர்.ஏகாம்பரம், எம்.ஏ.பழனிசாமி, வி.ஆர்.குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக தண்ணீர் தினத்தையொட்டி பாசன விவசாயிகள் நிர்வாகிகள் அனைவரும் நீர்பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பகிர்மான கமிட்டி செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி வரவேற்று தண்ணீர் தினவிழா நோக்கம் பற்றி பேசினார்.

நீரை சேமிக்க எளிய வழிகள் எனும் தொகுப்பை கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பா.அ.சென்னியப்பன் வெளியிட பாசனசபை நிர்வாகிகள் ஈ.சுப்பிரமணியம், கே.எம்.வாரணவாசி, எஸ்.எம்.நல்லசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வுpழாவில் கூட்டமைப்பு தலைவர் பொ.காசியண்ணன், துணைத்தலைவர் அ.ராமசாமி, யு5 செயலாளர் பி.என் பாலமுருகன், யு7 பொருளாளர் மற்றும் கடுக்கம்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் எஸ்.ஏ.பெருமாள், யு6 செயலாளர் கே.கே.குணசேகரன், யு7 தலைவர் வி.என்.தங்கமுத்து யு8ஏ தலைவர் வி.ஆர்.குமார், யு10 தலைவர் அ.செ.பழனிசாமி, யு8பி துணைசெயலாளர் ஈ.சுப்ரமணியம், டி.பெரியசாமி, பொருளாளர் எம்.என்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.ஏ.பழனிசாமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்