முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு குடிநீர் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்கள்.

புதன்கிழமை, 22 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் , திருப்பூர் வாலிபாளையத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு குடிநீர் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்களை  பொது மக்களிடம்   மாவட்ட கலெக்டர்   ச.ஜெயந்தி   நேரில்  சென்று வழங்கினார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில், மழை குறைவான அளவில் பெய்துள்ளதால்  பொது மக்களிடம் குடிநீரின் சிக்கனம், தேவை மற்றும் அவசியம் குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்   நாடு முழுவதும் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர், வாலிபாளையம், சடையப்பன் கோவில் அருகில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும்   மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள்.

மேலும், திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலக வாகனங்களிலும் குடிநீர் தேவைகள் குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளையும் மாவட்ட கலெக்டர்  ஒட்டினார்கள்.

      இந்நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் அசோகன், செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையர் சபியுல்லா, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்