முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் தீவிரவாத தாக்குதல்: இங்கிலாந்துக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும்: மோடி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியானார்கள் மற்றும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் மோடி கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு தீவிரவாதத்தை ஒழிப்பதில் இங்கிலாந்துக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் தீவிரவாத தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியானார்கள் மேலும் 40 பேர்  படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பலியானோர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும் அதை ஒழிப்பதிலும் இங்கிலாந்திற்கு இந்தியா ஆதரவாக இருப்பதோடு ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடந்து செல்பவர்கள் மீது காரை ஏற்றி இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். மேலும் பாராளுமன்ற காவலுக்கு நின்றிருந்த போலீசார் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர்.இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதியை ஸ்காட்லாந்து போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்து எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதோடு உறுதுணையாகவும் இந்தியா இருக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மேலே காரில் சென்ற தீவிரவாதி பொதுமக்கள் மீது ஏற்றியதில் 5 பேர் பலியானார்கள். இதில் 3 அதிகாரிகளும் அடங்கும் என்று இங்கிலாந்து தீவிரவாத எதிர்ப்பு போலீல் தலைமை அதிகாரியும் தற்காலிக உதவி கமிஷனருமான மார்க் ரோலே தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்