முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிகள் காப்பகம் உள்ளிட்ட சரணாலயங்களை பராமரிக்க ஒரு கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் சீனிவாசன் தகவல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சரணாலயங்களை பராமரிக்க   ஒரு கோடியே 17 லட்சம்  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில்  அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்  தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி.சீனிவாசன், வன விலங்குகள் மற்றும் வனப்பகுதி பாதுகாப்பிற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் அம்மா, 61 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தியதாக குறிப்பிட்டார். புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சரணாலயங்களை பராமரிக்க தற்போது ஒரு கோடியே 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி

மற்றொரு கேள்விக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி பதிலளிக்கையில், தி.மு.க. ஆட்சிக் காலத்தைக் காட்டிலும், மறைந்த  முதலமைச்சர் அம்மா ஆட்சிக் காலத்தில் ஊரகப் பகுதிகளில் 8,756 கோடி ரூபாய் செலவில் 46,500 கிலோ மீட்டர் தூர சாலைகள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கே.பி. அன்பழகன்

இன்னொரு கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர்  கே.பி. அன்பழகன், நாட்டிலேயே பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் உயர்கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 67 புதிய கல்லூரிகளையும், 959 புதிய பாடப்பிரிவுகளையும் மறைந்த முதலமைச்சர் அம்மா தொடங்கி உயர்கல்வித்துறையில் புரட்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருச்செங்கோட்டில் யோகா மற்றும் தியான மையங்கள் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பேரவையில் கேள்வி நேரத்தின்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்