முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமைச் செயலகத்தில் புகையிலை பயன்படுத்த தடை - உ.பி.முதல்வர் அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  : தலைமைச் செயலகத்தில் புகையிலை பயன்படுத்த தடை விதித்து  உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்தோடு லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்துக்கு திடீரென வருகை தந்த முதல்வர் சோதனை செய்தார் .இதனால் அதிகாரிகள் பரபரப்படைந்தனர். முதல்வர்  விசிட் உ.பி. அமைச்சரவையில் உள்துறையை தன் வசமே வைத்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.“சட்டம் ஒழுங்கு எப்படி பராமரிக்கப்படுகிறது, செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பார்வையிட நான் இங்கு வந்தேன், போலீஸாரின் மன உறுதி எப்படியிருக்கிறது என்பதை கணிக்க வந்தேன், இதற்கு என்ன வலுவான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் பரிசீலிக்கவுள்ளேன்.

சட்டம் ஒழுங்கு

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்செய்யப்படும், மக்கள் நலனுக்காக எந்த வித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கத் தயங்காது” என்றார். காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு, சைபர் பிரிவு மற்றும் பொதுவாக போலீஸ் எப்படி செயல்படுகிறது என்பதை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் .இது போன்ற அதிரடி வருகை முடிவல்ல ஆரம்பம் என்று அவர் சூசகமாக தெரிவித்தார். அனைத்துத் தரப்பிலும் நேர்மையை வலியுறுத்துகிறோம் என்று கூறிய அவர் உரிய நேரத்திற்குப் பணிக்கு வருதல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் ஆதித்யநாத், கட்டிடச் சுவர்களில் ஆங்காங்கே புகையிலை உமிழ்வுக் கறைகள் இருந்ததைக் கண்டு எரிச்சலடைந்தார், இதனையடுத்து பணியிலிருக்கும் போது புகையிலைப் பொருட்களை ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்