முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம்? அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூலில் விமான நிலையம் அமைப்பதற்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலத்தை வழங்க ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்தது.
மத்திய விமான போக்கு வரத்துத் துறை அமைச்சரான அஷோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்ப தால், அங்கு விமானத் துறை குறிப் பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. திருப்பதி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

குப்பம்  பகுதியில் விமான நிலையம்?

இதைத் தொடர்ந்து விஜய வாடாவை அடுத்துள்ள கன்னா வரம் விமான நிலையமும் புதுப் பிக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப் பட்டது. இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. குப்பத்துக்கு அருகே உள்ள பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில் இங்கு விமான நிலையம் தேவையா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

638.83 ஏக்கர் நிலமும் சர்வே

மேலும் ராயலசீமா பகுதியில் உள்ள கர்னூலில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக் குறுதி அளித்திருந்தார். அதன்படி ஓர்வகள்ளு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்காக, 638.83 ஏக்கர் நிலமும் சர்வே செய்யப்பட்டது. இப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்கப்பட்டு வருகிறது. எனினும் விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.8 லட்சத்துக்கு வழங்க ஆந்திர அரசு முன்வந்தது. ஆனால், அவ்வளவு விலை தர இயலாது என மத்திய அரசு கூறிவிட்டது.

மாநிலத் தின் வளர்ச்சி

இதையடுத்து ஆந்திர மாநிலத் தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்து, கடந்த திங்கள்கிழமை அரசாணையை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஓர்வகள்ளு, கன்னமடகலா, புடிசெர்லா ஆகிய கிராமங் களில் உள்ள நிலம் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளது. அதன்பின் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago