முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பிளாஸ்டிக் தேசிய கொடிகள் பயன்பாட்டை தவிர்க்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கியுள்ள அறிவுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டு மக்களின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை தேசிய கொடி பிரதிபலிக்கிறது. தேசிய கொடி மீது அளப்பரிய மரியாதை, அபிமானம் இருக்கிறது. அதே சமயம் தேசிய கொடி பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. காகித கொடிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத் தப்படுவதாக அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. காகித கொடியை போல பிளாஸ்டிக் கொடிகள் அவ்வளவு எளிதில் அழியும் தன்மை கொண்டது அல்ல. பல வருடங்கள் ஆனாலும், பிளாஸ்டிக் கொடிகள் அழியாது. இதனால் சுற்றுச்சூழலுக்குத் தான் கேடு.

காகித கொடிகளையே பயன்படுத்த வேண்டும்

கலாச்சார, தேசிய மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது காகித கொடிகளையே பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த கொடிகளை அப்படியே தரையில் வீசியெறியக் கூடாது. அந்த கொடிகளைக் கண்ணியம் குறையாமல் தனி இடத்தில் அப்புறப்படுத்தி வைக்கலாம்.

இதேபோல் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்பதையும் பொதுமக்களுக்கு மாநில அரசுகள் பரவலாக எடுத் துரைக்க வேண்டும். டிவி மற்றும் பத்திரிகைகளில் இதுதொடர் பாக விளம்பரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்