முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது.

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.03.2017 அன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்ட இருப்பு 5.30 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட இருப்பு 10.85 அடியும், சிற்றார்-1 அணையின் நீர்மட்ட இருப்பு 0.89 அடியும், சிற்றார்-2 அணையின் நீர்மட்ட இருப்பு 0.98 அடியும், பொய்கை அணையின் நீர்மட்ட இருப்பு 2.60 அடியும், மாம்பழத்துறையாறு நீர் மட்ட இருப்பு 24.52 அடியும் உள்ளது.20.03.2017 அன்று வரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் 245.545 (மெ.டன்) பரப்பில் நெல் பயிறு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 01.04.2016 முதல் 20.03.2017 முடிய 20,279 நெட்டை ரக தென்னங்கன்றுகளும், 19,035 நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகளும், 1,169 குட்டை நெட்டை ரக தென்னங்கன்றுகளும் ஆக மொத்தம் 40,483 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் விநியோகிப்பதற்காக டான்பெட் நிறுவனத்தில் 242 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு சங்கங்களில் 2,224 மெட்ரிக் டன்னும், தனியார் விற்பனையாளர்களிடம் 443 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 2,909 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பதில்கள் வாசிக்கப்பட்டது. உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியில் உள்ள செம்மன்குளம் என்ற தம்புரான்குளம், கோடாக்குளம் ஆகிய குளங்களை வரும் நிதியாண்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளும்போது முன்னுரிமை அளித்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், கக்கோட்டுதலை ஊரில் உள்ள தெரண்டான்குளம் அளந்து, எல்கை நிர்ணயம் செய்ய கேட்டு, கல்குளம் வட்டாட்சியர் அவர்களுக்கு 10.03.2017-ல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. வருவாய் துறை அளவையரால் உதவி பொறியாளர் முன்னிலையில் மேற்குறிப்பிடும் குளம் அளந்து, எல்கை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பு குறித்த வரைபடம் மற்றும் படிவம்-1 வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட பின், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவர் குளத்தின் மறுகால் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யும் பணிக்கு ரூ.3.00 இலட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பளிப்பு பெறப்பட்ட பின் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.கொல்வேல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், பங்குத்தொகை செலுத்தி, கடன் கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பத்மநாபபுரம், புத்தனாறு கால்வாய் மற்றும் அதன் கிளைக்கால்வாய்களை நபார்டு திட்டத்தில் புனரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒப்புதல் பெற்று, பணி மேற்கொள்ளப்படும் எனவும், வறட்சியை எதிர்கொண்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு உலர்தீவனம் விநியோகம் செய்வதற்காக கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் தோவாளை, அழகப்பபுரம், திங்கள்நகர், செம்மங்கலா ஆகிய கால்நடை மருந்தகங்களில் தீவன கிட்டங்கிகள் அமைத்து, மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம் செய்ய, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், முளங்குழி பகிர்மான கால்வாய் வரும் நிதி ஆண்டில், நிதி நிலைகளுக்கேற்ப முன்னுரிமை அளித்து சீரமைக்கப்படும். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்ற விளவங்கோடு வட்டாட்சியர் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரைப்படம் மற்றும் படிவம் பெறப்பட்டவுடன் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் எனவும், பறக்கை ஊராட்சிக்குட்பட்ட பாசனக்கால்வாய்களின் பக்கச்சுவர் இடிந்ததை சரிசெய்ய, சிறப்பு நிதிகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், திக்கணங்கோடு கால்வாயில் ஆண்டுதோறும் தூர்வாரப்பட்டு, ஒருமாவிளை, கருக்கன்குழி, பாட்டவிளை, சேனம்விளை, படுவாக்கரை, கொடுமுட்டி, வறுத்தான்விளை, பெத்தேல்புரம் ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்கு முறையாக சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது எனவும், அருவிக்கரை வலதுகரை கால்வாய் கடந்த நிதியாண்டு தூர்வாரப்பட்டு, விவசாயத்திற்கு சாரூர்குளம் வரை தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், அருவிக்கரை வலதுகரை கால்வாயில் மூன்று இடங்களில் நீர் ஒழுக்குகளை அடைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், சாரூர் குளத்தை தூர்வார மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், திற்பரப்பு அணை மற்றும் பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் அணைகள் திறக்கப்படும் எனவும், முட்டம் நீட்சிப்புக்கால்வாய் 3-வது மடையில் உள்ள அடைப்புகள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை (பொ)) சந்திரசேனநாயர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை (நீர் ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் பொறி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்