முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1.95 கோடி செலவில் குடிமராமத்து முறையில் புனரமைப்பு பணிகள் செய்தியாளர்கள் பயணத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தகவல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பொதுப்பணித்துறை, கோதையாறு வடிநில கோட்டம், நாகர்கோவில், நீர் ஆதார அமைப்பின் கீழ், தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் உள்ள குளங்களில், குடிமராமத்து முறையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் நேரில் சென்று, பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யவும், விவசாயியின் வாழ்வாதாரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, குடிமராமத்து முறையில் குளங்களை புனரமைக்க 2016-17-ம் ஆண்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, இப்பணிகளை உடனடியாக அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய வட்டங்களில் உள்ள குளங்களில் 59 குளங்களை தேர்வு செய்து, ரூ.1.95 கோடி செலவில், 37 திட்டப்பணிகளாக குடிமரமாத்து முறையில், குளங்களை புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.தோவாளை வட்டம், புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட இறச்சகுளம் கிராமத்தில் உள்ள நாரக்குளத்தில் ரூ. 4 இலட்சம் செலவிலும், இறச்சகுளம் பெரியகுளத்தில் ரூ. 4 இலட்சம் செலவிலும், திடல் ஊராட்சி, ப+தப்பாண்டி கிராமத்தில் உள்ள புதுகுளத்தில் ரூ. 3 இலட்சம் செலவிலும், தெரிசனங்கோப்பு கிராமத்தில் உள்ள கேசவநெறி குளத்தில் ரூ.5 இலட்சம் செலவிலும், தௌளந்திகுளத்தில் ரூ.5 இலட்சம் செலவிலும், திருப்பதிசாரம் கிராமத்தில் உள்ள வேம்பத்தூர் குளத்தில் ரூ.5 இலட்சம் செலவிலும், அஞ்சுகிராமத்தில் உள்ள பிராந்தநேரி குளத்தில் ரூ. 5.75 இலட்சம் செலவிலும், ரூ.4 இலட்சம் செலவில் கன்னியாகுமரி பேரூராட்சி, குமரி சாலை குளம் ஆகிய இடங்களில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் நடைபெற்று வரும் குடிமராமத்து முறையில் குளங்கள் புனரமைப்புப்பணிகளை இன்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பணிகளை துரிதபடுத்திட, பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.செய்தியாளர் பயணத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கோதையாறு வடிநில கோட்டம், நீர்வள ஆதார அமைப்பு) எஸ்.கே. சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் டி. விஜயகுமார், உதவி பொறியாளர் ஜே.ஆர். வின்சென்ட் லாரன்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) நி.சையத் முஹம்மத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago