Idhayam Matrimony

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுக்க கலெக்டர் எம்.ரவிகுமார் நடவடிக்கை

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தூத்துக்குடி

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுக்க மாநகராட்சி ஆணையர் ராஜாமணி, முன்னிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார்தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுக்க மாகராட்சி பணியாளர்கள், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், என மாநில இணை இயக்குநர்கள் (தொற்று நோய் தடுப்பு) துணை இயக்குநர்கள் நகர் நல அலுவலர்கள், முதன்மை பூச்சியல் வல்லுநர்கள் முதுநிலை பூச்சியல் வல்லுநர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக மஸ்தூர் பணியாளர்கள் என மொத்தம் 500 பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 விரைவு தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தினமும் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 60 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் மூன்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.பேருந்து நிலையம் ,பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையம் ,சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்;களில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்ற வசதியாக சிமெண்ட தொட்டிகளை மூடி போட்டு சுத்தம் செய்து சுண்ணாம்பு பவுடர் கொண்டு பூச வேண்டும். குடிநீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறும் வகையில் குழாய்கள் அமைத்திட வேண்டும். சிமெண்ட் தொட்டி மூடி போடமாமல் இருந்தால் குடிநீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறும் வகையில் குழாய் இல்லாமல் இருந்தால் அந்த வீட்டில் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். அத்துடன் அபதார நடவடிக்கைளும் மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் போது கண்டிப்பாக குளோரின் கலந்து வழங்க வேண்டும். குளோரின் கலந்து குடிநீர் வழங்க வில்லை என்றால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நேருயுவகேந்திரா மற்றும் மகளிர் அமைப்புகள் மூலம் வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டம் சுகாதாரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியான மாவட்டமாக திகழ வேண்டும் என கூறினார்.இந்நிகழ்ச்சயில் இணை இயக்குநர்கள் (சென்னை) டாக்டர்.சரவணன், டாக்டர்.பிரேம்குமார்(தொற்று நோய்) தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.சாந்தகுமார், இணை இயக்குநர்கள் (தூத்துக்குடி) டாக்டர்.பானு(மருத்துவபணிகள்) துணை இயக்குநர் (சேலம்)டாக்டர். .ஜே.நிர்மல்சன், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முதன்மை பூச்சியல் வல்லுநர் திரு.எம்.எஸ்.முகைதீன், அப்துல்காதர் துணை இயக்குநர்கள் டாக்டர்.எம்.மதுசூதனன், டாக்டர்.ஏ.டி.போஸ்கோ ராஜா, தூத்துக்குடி மாநகர நகர் நல அலுவலர் டாக்டர்.பிரதீப் கிருஷ்ணகுமார், உதவி ஆணையர்கள். சரவணன், ராமச்சந்திரன், ஆறுமுகம், காந்திமதி, மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்