முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் காசிவிஸ்வநாதருக்கு பிரம்மோற்சவம் மற்றும் தெப்பவிழா:31ந் தேதி முதல் 10 தினங்கள்; நடக்கிறது

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      வேலூர்

அரக்கோணம் காசிவிஸ்வநாதருக்கு பங்குனி உத்திர பிரம்மோற்சவம்; வரும் 31ந் தேதி தொடங்கி 10 தினங்களுக்கு நடத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் பகவான் மஹாவீர் வீதியில் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதரும் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவ விழா வருகிற 31ந் தேதி முதல் நாளில் காலை 730 மணியளவில் கொடியேற்றத்துடன் மஹா அபிஷேகம், காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி திருவீதி உலா நடக்க இருக்கிறது. ஏப்ரல் முதல் தேதி இரண்டாம் நாள் உற்சவம் காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி சிம்ம வாகனத்தில் வீதி உலா. 2ந் தேதி மூன்றாம் நாள் காலை 9மணி முதல் காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி அன்னபட்சி வாகனத்திலும், 3ந்தேதி நான்காம் நாள் உற்சவத்தில் காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி நாக வாகனத்திலும். 4ந் தேதி ஐந்தாம் நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்தி மயில் வாகனத்திலும் வீதி உலா. 5ந் தேதி ஆறாம் நாள் உற்சவத்தில் காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி யாணை வாகனத்திலும். 6ந் தேதி ஏழாம் நாள் உற்சவத்தின் போது ரிஷப வாகனத்திலும். 7ந் தேதி எட்டாம் நாள் உற்சவத்தில் குதிரை வாகனத்திலும். 8ந் தேதி ஒன்பதாவது நாளில் ரிஷப வாகனத்திலும் காசி விஸ்வநாதர் -காசி விசாலாட்சி அழைத்து செல்லபடுகிறார். 9ந் தேதி 10ம் நாள் நிகழ்வாக காலை 9மணிக்கு நடராஜர் கேடய உற்சவமும், மாலை 6மணிக்கு மேல் திருகல்யாணமும், இரவு 7மணிக்கு உப்பு குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்க இருக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி விழா குழுவினர், ஆலய குருக்கள் ஏடி.பாபு குருக்கள், என்.குப்புசாமி குருக்கள், ஆகியோருடன் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago