முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் நகராட்சி டேக்வாண்டோ உள்விளையாட்டு பயிற்சி அரங்க கட்டிடப் பணிகள்: கலெக்டர் சி.அ.ராமன், பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் புதிதாக ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் டேக்வாண்டோ உள்விளையாட்டு பயிற்சி அரங்க கட்டிடப் பணிகளை கலெக்டர் சி.அ.ராமன், பார்வையிட்டு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.வேலூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பள்ளி கல்லூரிகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர்கள் சாம்பியன்களாக உருவாகியுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஒட்டு மொத்த சாம்பியனாக இம்மையம் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச (ஓபன் இன்டர்நேஷனல்) போட்டியில் அரக்கோணத்தை சேர்ந்த எச்.பாலசுப்பிரமணி என்ற வீரர் ஈரான் வீரரை வீழ்த்தி தமிழகத்திற்கு முதல் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜாஸ்வின் ராஜ்குமார் என்ற வீரர் 5 வது காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பிரசாந்த் என்ற மாணவர் ஆல் இந்தியா யூனிவர்சிட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களையும், 33 மற்றும் 34-வது தேசிய விளையாட்டு போட்டியில் 3 வெண்கல பதக்கங்களையும் இம்மையத்தை சார்ந்த மாணவர்கள் வென்றுள்ளனர்.மேலும் பள்ளி மாணவர்கள் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் 90-க்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள், 2 கால்நடை மருத்துவர் இடங்கள், 1 மருத்துவர் இடம் பெற்றுள்ளனர். 2016 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஓபன் இன்டர் நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு துணை ராணுவத்திற்கு தங்கம் பெற்று தந்துள்ளார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படையில் ஒரு மாணவனும், சுங்கத்துறையில் ஒரு மாணவனும் டேக்வாண்டோ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். இத்தனை சாதனைகளையும் சொந்த இடம் இல்லாமல் பல்வேறு தற்காலிகமான இடங்களில் பயிற்சி அளித்து வெற்றி பெற்றுள்ளார்கள். தற்போது டேக்வாண்டோ மாணவர்களுக்கு நிரந்தரமாக பயிற்சி பெற உள்விளையாட்டு அரங்கம் கிடைத்துள்ளதால் மாணவர்கள் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும் என்று டேக்வாண்டோ பயிற்சி மைய செயலாளர் அவர்கள் கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தனர்.தொடர்ந்து டேக்வாண்டோ வீரர்கள் காமென்வெல்த், ஆசிய போட்டி, தேசிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கைப்பற்றிய கோப்பைகள் மற்றும் பதக்கங்களை பார்வையிட்டு டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள், வீரர் வீராங்கனைகளை பாராட்டி மேலும் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற கலெக்டர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ்,இ.கா.ப., கோட்டாட்சியர் ராஜலட்சுமி, பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் சங்கரன், மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் மருத்துவர் மரு.சந்திரமௌலி, செயலாளர் கோதண்டன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் ஜோசப்ராஜ், தமிழ்வாணன், ஜெய்சந்திரன், ராஜேஷ், யுவராஜ், சரவணன், நவீன், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்