முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 39 வழக்குகளுக்கு தீர்வு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) முகாம் மூலம் கார்பரேஷன் வங்கியில் பெற்ற கடன்களுக்குண்டான 39 வழக்குகளுக்கு வட்டி தள்ளுபடியுடன் தீர்வு காணப்பட்டது. ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை கார்பரேஷன் வங்கியில் தொழில் கடன், விவசாயக்கடன், கல்விக்கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வட்டி தள்ளுபடியுடன் 39 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.6.10 லட்சம் கடன் தொகை வசூல் செய்யப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மேரிஆஞ்சலம் கடன் தீர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆவணங்களை வழங்கினார். உடன் சார்பு நீதிபதி எழில்வேலவன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமலதாடேனியல், கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் சுகுமார், உதவிமேலாளர் ப்ரியன், சட்டப்பணிகள் குழு அலுவலர் சையத்ரஷீத், வழக்கறிஞர் சங்க தலைவர் தனஞ்செயன வழக்கறிஞர்கள் வி.வெங்கடேசன்,திரிலோகசுந்தர், திருஞானம், பார்த்தீபன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்