முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் அதிபர் அழைப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத் : காஷ்மீர் பிரச்சினையை அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹூசைன் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் உறையாற்றிய மமூன் ஹூசைன் பேசும்போது, " ஐநாவின் தீர்மானத்தின் படி இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண தயாராக இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நீதிக்காக பாகிஸ்தான் தொடர்ந்து துணை நிற்கும்.

காஷ்மீரில் பிரச்சினையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் பல வருடங்களாக தீவிரவாதத்துக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. பாகிஸ்தான் மக்கள் முன்பைவிட பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் அதற்காக பல தியாகங்களை செய்துள்ளன" என்றார்.

மேலும் போர் நிறுத்தத்தையும் மீறி இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையும் மமூன் ஹூசைன் கடுமையாக சாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்