முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றார் இலங்கை அதிபர்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். 43 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அதிபர், ரஷ்யாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

புட்டின் அழைப்பு

இலங்கை, ரஷ்யா இடையே இருதரப்பு உறவுகள் நிர்மாணித்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி ரஷ்யாவுக்கு வருமாறு அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் சிறிசேனா அங்கு சென்றிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக- முதலீடுகள்  பேச்சுவார்த்தை

தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய அதிபர் புதினை இன்று சந்திக்கும் சிறிசேனா இருநாட்டு நல்லுறவு குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கடைசியாக கடந்த 1974-ம் ஆண்டில் இலங்கையின் அதிபராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகே மாஸ்கோ சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்