முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்ட வழிப்புணர்வு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் சார்பாக நடைபெற்ற பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் விவசாயிகள் பயன்பெறும் வகையிலான வேளாண் கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். ஆப்போது அவர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையான பொதுமக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.  விவசாயத்தினை நம்பியுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காத சூழ்நிலையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  அதனடிப்படையில் தற்போது பிரதம மந்திரியின் புதிய பயிர்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இப்புதிய பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறுவை பயிர்களுக்கு 2 சதவீதம், சம்பா பயிர்களுக்கு 1.5சதவீதம்,  தோட்டப்பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கு அதிகபட்சமாக 5சதவீதம் என விவசாயிகளுக்கான காப்பீட்டு ப்ரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இப்பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ப்ரீமியம் தொகையானது மிக குறைவான தொகையாகும்.  பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் என அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம். இப்பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரித்திடும் நோக்கத்தில் இவ்விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டில்  பிரதம மந்திரியின் புதிய பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 1லட்சத்து 26ஆயிரத்து 324 விவசாயிகள் ரூ.8கோடியே 80லட்சத்து 83ஆயிரத்து 312 மதிப்பில் ப்ரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்துள்ளனர்.  இதனடிப்படையில் விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ.586கோடியே 98லட்சத்து 97ஆயிரத்து 115 மதிப்பிலான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை பெற வாய்ப்புள்ளது.  இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும்  பிரதம மந்திரியின் புதிய பயிர்காப்பீட்டு திட்டம் குறித்த முழுமையான விழிப்புணர்வு பெற்று இத்திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மேலாளர் சி.மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு.சுரேஷ் பாபு ஆகியோர் பிரதம மந்திரியின் புதிய பயிர்காப்பீட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தி.மோகன், கடலோர உவர் ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர்.ந.சாத்தையா, மாவட்;ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி,  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ச.தமிழ்வேந்தன், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ரெ.ராஜசேகரன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago