முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக பேரணி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      சென்னை

உலக குடிநீர் தினத்தை ஒட்டி பொதுமக்களுக்கு தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் சார்பாக புதன்கிழமை கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் சார்பாக நடைபெற்ற இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்வில் பேரூராட்சி ஊழியர்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இருந்து ரெட்டம்பேடு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகளில் பேரணியாக சென்றனர்.

பேரணியின் போது மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தண்ணீர் சிக்கனத்தை எடுத்துரைத்தனர்.
அதே போல கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக ஆட்டோவில் வீதி வீதியாக தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago