முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1748.28 கோடிஒதுக்கீடு செய்து உள்ளது.

விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்தியக் குழு பரிந்துரை

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடபட்டு இருந்தது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய குழு தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.2096.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு

இதே போல தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.1748.28 கோடி வழங்க துணைக்கமிட்டி உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு  ரூ.1748.28 கோடி ஒதுக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்