முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியத்தில் கார் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற வாலிபர் கைது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

பிரஸ்சல்ஸ்  - இங்கிலாந்தை தொடர்ந்து பெல்ஜியம் மார்க்கெட்டில் காரை மோதி தாக்குதலில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

லண்டன் தாக்குதல்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை விட்டு மோதி தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். அதில் 4 பேர் பலியாகினர். அது போன்ற சம்பவம் நேற்று முன்தினம் பெல்ஜியம் நாட்டில் நடந்தது. அங்கு ஆன்ட்வெர்ப் என்ற துறைமுக நகரம் உள்ளது. இங்குள்ள மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒருவர் கைது
அப்போது வேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அக்காரை மடக்க பிடித்னர். அவரது பெயர் முகமது ஆர். (39). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். அவரது காரில் இருந்து கத்திகள், துப்பாக்கி, கியாஸ் கேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதைத தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மக்கள் கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் வரவில்லை என தெரிய வந்தது.

குடிபோதையில் ...
அவர் குடிபோதையில் இருந்ததாகவும், போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். மேலும் இவர் துனிசியாவை சேர்ந்தவர் என்றும், பெல்ஜியம் எல்லை அருகே லென்ஸ் என்ற பிரான்ஸ்நகரில் தங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர் ஓட்டி வந்த கார் பிரான்ஸ் நம்பர் பிளேட்டுடன் இருந்ததால் அவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் என போலீசார் சந்தேகப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்