முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை ஏற்க முடியாது : சுஷ்மா ஸ்வராஜ்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - முழு விபரங்கள் இல்லாமல் அமெரிக்கா வழங்கியுள்ள சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை ஏற்க முடியாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

271 பேர் பட்டியல்
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா  ஸ்வராஜ் கூறியதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக 271 இந்தியர்களின் பட்டியலை அந்நாடு வழங்கியுள்ளது. ஆனால் இந்த பட்டியலை ஏற்க முடியாது. முழு விவரங்கள் வேண்டும். தகவல்களை நாங்கள் சரிபார்த்த பின்னரே இதனை ஏற்க முடியும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பில் அவர்கள் இந்தியர்கள் என்பது உறுதியானால் அவசரமாக அங்கிருந்து வெளியேறுவதற்காக நாங்கள் சான்றிதழை வழங்குவோம்.” எனத் தெரிவித்தார்.

வேலையை திருடவில்லை
மேலும் ,”அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பின்னர் அந்நாட்டு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியாக இருக்காது. எனினும், அங்கு வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் திறமையான தொழில் நிபுணர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக உள்ளதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இந்திய ஐடி துறையினர் வேலையை திருடவில்லை. அவர்கள், அமெரிக்க பொருளாதாரம் வலுவடைவதற்காக தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்” எனவும் கூறினார். இந்திய மென்பொருள் பொறியாளர்களை பெரிதும் பாதித்துள்ள எச்1பி விசா குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்