முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்குவதில் மூன்று இடங்களைப் பெற்ற வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் எம்.ரவி குமார் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், வழியாக வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் 25% மானியத்துடன் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரையிலான தொழிற்கடன்கள் வழங்கப்படுகின்றன. 18 முதல் 45 வயது வரையுள்ள, 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு மொத்த வருமானம் ரூ.150000/= க்கும் குறைவாக உள்ள ஆண், பெண் இருபாலரும் கடன் பெற வாய்ப்புள்ள யு.ஒய்.இ.ஜி.பி திட்டத்தில் 2016-17ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் கடன்கள் வழங்குவதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளின் மண்டல மேலாளர்கள் மற்றும் கடன் வழங்கிய வங்கி கிளை மேலாளர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி கலெக்டர் எம்.ரவிகுமார் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியின் போது வங்கி மேலாளர்களைப் பாராட்டிய கலெக்டர் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இது போன்ற அரசு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி இணைப்பிணையமில்லா கடன்களை வழங்க வங்கி மேலாளர்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணை பொது மேலாளர் ராஜபாண்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, முன்னோடி வங்கி அலுவலர் விஜயகுமார் மற்றும் வங்கி அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago