Idhayam Matrimony

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் 46வது தேசிய பாதுகாப்பு மாத நிறைவு விழா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் 46.வது தேசிய பாதுகாப்பு மாதத்தின் நிறைவு விழா மார்ச் 11 சனிக்கிழமை அன்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் நடைபெற்றது.வுpழாவில் தமிழக அரசின் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் தலைமை உரை ஆற்றி, தொழிற்சாலையில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பல்வேறு உதாரணங்களோடு எடுத்துரைத்து பாதுகாப்பு கையெட்டினை வெளியிட்டார்கள். பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இயக்கத்தின் மதுரை கூடுதல் இயக்குநர் சிதம்பரநாதன் ஏற்புரை வழங்கினார் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைவர் ராம்நாத் முன்னிலை வகித்தார். உபதலைவர் முருகேஸ்வரன் மற்றும் ஆலை மேலாளர் திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் நிறுவனத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை தலைவர் சந்திப் ஆண்டறிக்கை வாசித்தார். ஒரு மாத காலமாக நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்க்குமாக நடைபெற்ற பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம், தொழில்முறை பயிற்சி, ஓவியப்போட்டி, குறுக்கு எழுத்து போட்டி, கவிதை போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக பாதுகாப்பு அதிகாரி ஜோன் ஆரோக்கியராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.முன்னதாக பாதுகாப்பு கண்காட்சியை இயக்குநர் போஸ் திறந்து வைத்தார்கள்.விழாவில் கோவில்பட்டி பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை மற்றும் துணை இயக்குநர்கள் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சாலைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டர். விழா ஏற்பாடுகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்