அனைவரும் ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவாக்குவோம் சேலம் மாவட்ட கலெக்டர் வா.சம்பத் பேச்சு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      சேலம்
1

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (24.03.2017) நடைபெற்ற உலக காசநோய் தினத்தையொட்டி கலெக்டர் வா.சம்பத், காநோய் ஒழிப்பு உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது.உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது பரம்பரை வியாதி அல்ல. காசநோய் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மது பழக்கம், புகைப்பழக்கம், புகையிலை பழக்கம் உள்ளவர்கள், எச்ஐவி நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களை எளிதில் தாக்குகிறது. சிகிச்சை பெறாத காசநோயாளி பாதுகாப்பற்ற முறையில் இரும்பும் போதும் தும்மும் போதும் இக்கிருமி காற்றில் பரவுகிறது. இரண்டு வார இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலைநேர காய்ச்சல், நெஞ்சுவலி மற்றும் சளியில் இரத்தம் வெளியேறுதல். மேற்கூறிய அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தால் உடனே சளிபரிசோதனை செய்ய வேண்டும். சளிபரிசோதனையில் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 6-8 மாத டாட்ஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலவசமாக கிடைக்கிறது. முதல்நிலை காசநோய் மருத்துகளை முறையாக உட்கொள்ளாவிட்டால் வீரியமிக்க முதல்நிலை மருந்துக்கு கட்டுபடாத காசநோயாக மாறலாம். இதற்கான அதிநவீன பரிசோதனை சேலம் மாவட்டத்தல் உள்ளது. இதற்கு 24 முதல் 27 மாத கால சிகிச்சை எடுக்க வேண்டும். காசநோய்க்கான சிகிச்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலவசமாக கிடைக்கிறது. சேலம் மாவட்டத்தில் 23 காசநோய் அலகுகள் உள்ளன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் அருகில் உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டு 3,372 காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உறுவாக்குவோம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார். முன்னதாக இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் உறுதிமொழி ஏற்பு, காநோய் விழிப்புணர்வு குறும்பட வெளியீடு, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குதல், காசநோய் தடுப்பு திட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் மற்றும் காநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) டாக்டர்.எம்.வளர்மதி, துணை இயக்குநர் (காசநோய் தடுப்பு பிரிவு) டாக்டர்.கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர்.பூங்கொடி, துணை இயக்குநர் (தொழுநோய்) டாக்டர்.குமுதா, மாநகர் நல அலுவலர் ஆர்.செல்வகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: