திருவண்ணாமலையில் ஓட்டலில் சாப்பிட்டபோது கைதி தப்பியோட்டம் 2 போலீசார் சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஓட்டலில் சாப்பிடும்போது கைதி தப்பியோடிவிட்டார் கைதியை தப்பவிட்ட 2 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவிட்டுளளார் திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (32) இவர் கடந்த 20ந் தேதி பவித்திரம் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் மண்ணை கொட்டி மூடியுள்ளார் இதுகுறித்து பள்ளியின் முதல்வர் தெலிந்தா , ஊராட்சி செயலர் பச்சையப்பனுக்கு தகவல் தெரிவித்தார் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பச்சையப்பன் கழிவுநீர் காவல்வாயில் உள்ள மண்ண அகற்ற முயன்றுள்ளார் அப்போது அங்கு வந்த வைத்தியலிங்கம் இந்த கழிவுநீர் காவல்வாய் இடையூறாக உள்ளதால் நான்தான் மண்ணை கொட்டினேன் ஏன் மண்ணை எடுக்கிறாய் என்று தகராறு செய்துள்ளார் அபபோது ஏற்பட்ட தகராறில் ஆததிரமடைந்த வைத்தியலிங்கம் கையில் இருந்த பிளேடால் பச்சையப்பனின் கையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பச்சையப்பன் மற்றும் தெலிந்தா ஆகியோர் வெறையூர் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியலிங்கத்தை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வைத்தியலிங்கத்தை வெறையூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி, மற்றும் ஏட்டு சீனுவாசன் ஆகியோர் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்பேரில் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச சென்றனர் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்டனர் சாப்பிட்ட பிறகு கை கழுவுவதற்காக வெளியே சென்ற வைத்தியலிங்கம் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி கைதியை தப்ப விட்ட உதவி ஆய்வாளர் ரவி, தலைமை காவலர் சீனுவாசன் ஆகிய 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய வைத்தியலிங்கம் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில்உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்திரம் பகுதியில் உள்ள ªல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: