முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்:கலெக்டர் சி.அ.ராமன், பேச்சு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

காசநோய் (மைக்ரோ பாக்டிரியம் டுயூபர்குலோசிஸ்) என்ற கிருமியால் ஏற்படுகிறது. இதை 1882 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி ஜெர்மனியை சேர்ந்த ராபர்ட் காக் என்ற விஞ்ஞானி கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வேலூர் மாவட்ட காச நோய் மையத்தின் சார்பாக வேலூர் நகர அரங்கில் "உலக காசநோய் தின விழா" கலெக்டர் சி.அ.ராமன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து "அனைவரும் சேர்ந்து காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- உலக காசநோய் தினவிழா உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 2 இலட்சத்து 20 ஆயிரம் நபர்கள் காசநோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதிலும் சராசரியாக 10 சதவிகிதம் மக்கள் இந்த காசநோயால் மரணமடைகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த காசநோயை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியுமா என்பது தான் கேள்வி. பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும். காசநோயை கண்டறிய வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கண்டறியப்படும் நோயாளிகள் முறையான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் இந்த காசநோயை தடுக்கலாம். பொதுமக்களுக்கு சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததே இந்த நோய் பரவுவதற்கு காரணம். நுரையீரலை பாதித்து அதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மரணம் அடையும் நிலைக்கு இந்த நோய் பாதிப்புக்குள்ளானோர் ஆளாகின்றனர். ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு இருமல் மூலமாக பரவும் இதனை தடுக்க வேண்டும். காசநோய் பாதிப்படைந்தோர் மருந்து மாத்திரைகள் தொடர்ந்து 8 மாதங்கள் எடுத்துக்கொண்டால் 90 சதவிகிதம் நோய் குணமடைந்துவிடுகிறது. அதன்படி முதல் மாதத்திலே முறையாக மருந்தை எடுத்துக்கொண்டால் நோய் கட்டுக்குள் வந்து விடுகிறது. மேலும் 6 மாதம் எடுத்தால் நோய் முழுவதும் குணமாகும். இதனை செயல்படுத்தத்தான் மத்திய மாநில அரசுகள் இணைந்து திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் திட்டமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் காசநோயாளிகள் கண்டுபிடிப்பு 70 சதவிகிதமும், சளியில் கிருமியுள்ள காசநோயாளிகள் தீவிர சிகிச்சைக்குப்பின் சளியில் கிருமியற்றவர்களாக மாறும் நிலை 90 சதவிகிதமும், 6-8 மாதம் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தோர் 85 சதவிகிதமும் உள்ளனர். மைய காசநோய் மையம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து "3ஐ" எனும் எச்.ஐ.வி, தொற்று உள்ளவர்களுக்கு காசநோயை விரைவில் கண்டறிய இந்த திட்டம் உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து "99 னுழுவுளு.உழஅ" எனும் திட்டம் முதன் முதலில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் ஜுலை 2015 துவக்கப்பட்டது. "99 னுழுவுளு.உழஅ" எச்.ஐ.வி. – காசநோய் நோயாளிகளை இணையதளத்தின் மூலம் கண்காணிக்க இலவச டோல் எண்ணிற்கு மாத்திரைகளை உண்ட பிறகு அழைப்பு விடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அழைக்க தவறியவர்கள் இணையதளத்தில் கண்டறிந்து களப்பணியாளர்கள் மூலம் சிகிச்சைக்கு மீட்கப்படுகின்றனர். மேலும் இதன் மூலம் 2016-2017 ஆம் ஆண்டில் 107 காசநோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். ஆகவே பொதுமக்களும் மருத்துவர்களும் இணைந்து இந்த காசநோயினை முற்றிலும் வேலூர் மாவட்டத்திலிருந்து அகற்றிட ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சி.அ.ராமன், பேசினார் இதனை தொடர்ந்து உலக காசநோய் தினத்தையொட்டி கிராஸ் தொண்டு நிறுவனத்தினர், உதவும் உள்ளங்கள் நிறுவனத்தினர், நாராயணி மருத்துவமனை செவிலியர்கள், நாராயணி மருத்துவ கல்லூரி, பி.பி.ஆர். கல்லூரி மற்றும் ஜே.பி.கே.எம் கல்லூரிகளின் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்த சமுதாய பயிற்றுநர்களுக்கு ஊக்க தொகைகளை கலெக்டர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.இ.கலிவரதன், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய் தடுப்பு) மரு.ராஜா சிவானந்தம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கே.எஸ்.டி.சுரெஷ், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.சு.முகமது அப்சல் அலி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.சாந்தி, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநர் மரு.பாலாஜி நந்தகோபால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ துறைத்தலைவர் மரு.எ.தேரணிராஜன், பென்லென்ட் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கீதா, உதவும் உள்ளங்கள் நிறுவனர் இரா.சந்திரசேகரன், றுழுசுனு இயக்குநர் அ.மரகதம், அரசு மருத்துவக் கல்லூரி மூத்த மருத்துவ அலுவலர் மரு.பிரசில்லா சினேகலதா சுவாமிக்கண் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமுதாய பயிற்றுநர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்