முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், கோவை மாநகராட்சியும் மற்றும் அறம் பவுண்டேஷன் சாரிட்டபுள் டிரஸ்டும் இணைந்து, அவதார் தொண்டு நிறுவனத்தின் மூலம் 20 மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள 8-ம் வகுப்பு 12 வகுப்பில் பயிலும் 2000 மாணவிகளுக்கு தொழிற்சா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், கோவை மாநகராட்சியும் மற்றும் அறம் பவுண்டேஷன் சாரிட்டபுள் டிரஸ்டும் இணைந்து, அவதார் தொண்டு நிறுவனத்தின் மூலம் 20 மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள 8-ம் வகுப்பு 12 வகுப்பில் பயிலும் 2000 மாணவிகளுக்கு தொழிற்சார்ந்த ஆற்றல் தன்மையை மேம்படுத்தி பயிற்சி அளிக்கும் விதமாக “புத்ரி” எனும் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியும், அறம் பவுன்டேஷன் சாரிடபிள் டிரஸ்ட்டும் இணைந்து, வருகின்ற கல்வியாண்டில் சென்னையை சார்ந்த அவதார் தொண்டு நிறவனத்தின் தொழில் சார்ந்த நோக்குத்தன்மையை மேம்படுத்தும் “புத்ரி” என்கிற திட்டத்தை      8 முதல் 12-ம் வகுப்பில் படிக்கும் 2000 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளர்கள். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் இது தொடர்பாக பயிற்சியாளர்கள் மூலம் 30 மணிநேரம் பயிற்சி நடத்தப்படும். இதில் ஒவ்வொரு மாணவியின் தகுதியையும், ஆற்றலையும், திறமையையும் மனதில் கொண்டு அவரவர் ஆர்வம் மற்றும் விருப்பதிற்கேற்ப கல்வி பயிற்சி, தொழில் பயிற்சி, வழிகாட்டுதல், விழிப்புணர்வு என 5 ஆண்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.

          மேலும், மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் முன்மாதிரிகள், தொழில் கூடங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் தொழில் சார்ந்த பயிற்சியும் கற்றுத்தரப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் மாணவிகள் அனைவரும் தொழிற்சார்ந்த நோக்குத் தன்மை மேம்படுத்தக்கூடும்.

                இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , மாநகராட்சி கல்வி அலுவலர் உமா, அறம் பவுன்டேஷன் நிர்வாகிகள் லதா சுந்தரம், மாதவன், அவதார் ஹ{யூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் திட்ட இயக்குநர் ஈஸ்வர் பாலசுப்ரமணியன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்