முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில் 21வது கல்லூரிஆண்டுவிழா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில் 21வது கல்லூரிஆண்டுவிழா நேற்று நடைபெற்றது.சங்கம் - 4 நிறுவனர், ஜெகத் கஸ்பர், சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுபல்வேறுதளங்களில் சாதனைகள் புரிந்தபேராசிரியர்கள்,ஆசிரியர் அல்லாதபணியாளர்கள் மற்றும் மாணவமாணவிகளுக்குபரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிபேசுகையில, பல்வேறுவகையானசாதிகள் நடைமுறையில் இருந்தாலும் நம் அனைவரையும் இணைப்பதுதமிழாகும். இயற்கையிலேயே இசையோடு இணைந்ததுதமிழ் மொழியாகும் என்றும்,நாம் இலவசங்களைஏற்பதைத் தவிர்த்துநமக்குதேவையானதை,நம்மால் முடிவதைநாமேசெய்து இலவசகலாச்சாரங்களுக்குமுற்றுப் புள்ளிவைக்கவேண்டும்,நம்மால் முடியாததைஅரசாங்கம் செய்துகொடுக்கும். ஒவ்வொருமனிதனும் தற்சார்புடனும, தன்மானத்துடனும் வாழ்வதுமிகஅவசியமாகும். மற்றவர்கள் முயற்சிசெய்துதோற்க்கும் போதுஅவர்களை இகழாமல் உதவிகரமாக இருக்கவேண்டும். நமதுஉல்லாசத்திற்குசெல்வங்களைமுதலீடுசெய்யாமல் தேவைப்படுவோர்க்குஉதவவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.

நாஸ்காம்,தமிழ்நாடுமற்றும் கேரளர்,முதுநிலை இயக்குநர், புருஷோத்தமன் கௌரவவிருந்தினராககலந்துகொண்டுபேசுகையில் ஒவ்வொருமனிதனும் வேலைக்குச் சென்றபிறகுகுறுகியவட்டத்திற்குள் வாழாமல் உற்றார் உறவினர்களுடனும்,நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும். எத்தகையபணிகிடைத்தாலும் நமதுகலாச்சாரம் சார்ந்தசெயல்பாடுகளைவிட்டுக் கொடுக்கக் கூடாதுஎன்று கூறினார்.

      இவ்விழாவைகல்லூரியின் தலைவர். ஜி. கமலமுருகன் தலைமைஏற்றார். செயலாளர். எஸ். என். தங்கராஜீ,தாளாளர். ஒய். எஸ். மதிவாணன்,பொருளாளர் எஸ். செந்தில்குமார்,ஆகியோர்வாழ்த்துரைவழங்கினர். துணைத் தலைவர்களஏ. மோகனசுந்தரம் மற்றும் ஏ. பி.வி. சாமிநாதன், இணைச் செயலாளர்கள். வி. தர்மலிங்கம்மற்றும் முனைவர் எஸ். பூரணிஆகியோர்முன்னிலைவகித்தனர். கல்லூரியின் அறக்கட்டளைஉறுப்பினர்கள் கலந்துகொண்டுவிழாவைகௌரவித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர். வி. வெங்கடாச்சலம் கல்லூரியின் ஆண்டறிக்கையைவாசித்தார். கல்லூரியின் சிறந்தமாணவியாகதேர்ந்தெடுக்கப்பட்டகட்டிடப் பொறியியல் துறைமாணவி ஜெ. சுஜிதா, ஜெயதர்ஷினிஅனைவரையும் வரவேற்றார். சிறந்தமாணவராகதேர்ந்தெடுக்கப்பட்ட இரசாயனப் பொறியியல் துறையில் பயிலும் கே. வெங்கடேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்