முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கலெக்டர் சிவஞானம் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர். விருதுநகர் மாவட்டம், சிவாகாசி ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம், செல்வ விநாயகர்; மகளிர் சுய உதவிக் குழு, மாநில அளவில் சிறந்த மகளிர் சுய உதவிக்குழுவாக தமிழ்நாடு  மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவஞானம்.  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
 சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாரணாபுரம் ஊராட்சியில் செல்வ விநாயகர் மகளிர் சுய உதவிக் குழுவினை 13 பெண்கள் சேர்ந்து 22.04.2001-ம் ஆண்டில் மகளிர் திட்டத்தின் மூலம் தொடங்கினார்கள்
 செல்வ விநாயகர் மகளிர் சுய உதவிக்  குழுவிற்கு திருத்தங்கல்  பாண்டியன் கிராம வங்கியில் வங்கிக் கணக்கு துவங்கி செயல்படுத்தி வந்தார்கள். பின்பு மகளிர் திட்டத்தின் மூலம் பொருளாதாரக் கடன் மற்றும் வங்கி நேரடிக் கடன் ஆகியவை மூலம் ரூ. 3.73 இலட்சம் பெற்று விருதரசி கெமிக்கல்ஸ் என்ற பெயரில் பொது சுகாதாரப்பொருட்கள் தயாரிக்கும் சுயதொழிலை 03.08.2005-ல் தொடங்கினார்கள் மேலும்  சிவகாசி கார்ப்பரேசன் வங்கியில் வங்கி நேரடிக் கடனாக ரூ. 5.00 இலட்சம் பெற்று பொது சுகாதாரப்பொருட்கள் தயாரிக்கும் சுயதொழிலை விரிவுபடுத்தினார்கள்.
 செல்வ விநாயகர் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் மரக்கன்று நடுதல், டெங்கு விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு, பள்ளி செல்லாமல் இடையில் நின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தன்கையே தனக்குதவி எனும் வாழ்க்கைக்கல்வி திட்டத்தின்கீழ் வீட்டு உபயோகபொருட்கள் தயரிக்கும் பயிற்சியினை வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகிறார்கள்.
 செல்வ விநாயகர்; மகளிர் சுய உதவிக் குழுவின் சேவையினை பாராட்டி தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு  மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் செல்வ விநாயகர்; மகளிர் சுய உதவிக் குழுவினை மாநில அளவில் சிறந்த சுயஉதவிக்குழுவாக தேர்ந்தெடுத்து ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத்தெகை மற்றும் விருதும் வழங்கி சிறப்பித்தது. இவ்விருதினை  பெற்ற செல்வ விநாயகர்; மகளிர் சுய உதவிக் குழுவினரை மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவஞானம்  பாராட்டி வாழ்த்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்