முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலி மீதான விமர்சனம்: கிரிக்கெட் வாரியம் மீது அனுராக் தாகூர் பாய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அனுராக் தாகூர் புதிய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு மற்றும் ஆஸ்திரேலியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

டி.ஆர்.எஸ். சர்ச்சை
இந்தியாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் டி.ஆர்.எஸ். முறை விதியை மீறி பயன்படுத்தினார். இதுபற்றி இந்திய கேப்டன் விராட்கோலி விமர்சனம் செய்தார். சுமித் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் செய்தது. அதன்பின் அதை வாபஸ் பெற்றது. இவ்விவகாரத்தில் விராட்கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகியும் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டார்.

குற்றச்சாட்டு
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அனுராக் தாகூர் புதிய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு மற்றும் ஆஸ்திரேலியா மீது பாய்ந்துள்ளார். அவர் கூறியதாவது:- விராட்கோலி பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி மற்றும் ஊடகங்கள் கருத்து தெரிவிப்பது அவமானகரமான செயல். இந்திய கிரிக்கெட் வாரியம் அணியில் நேர்மையில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கோலி அணிக்கு ஆதரவாக நிற்கவில்லை. இது கிரிக்கெட் வாரியத்தின் தவறு. ஆஸ்திரேலிய வாரியத்தின் ஆணையம், எப்போதும் கிரிக்கெட்டையும், வீரர்களையும் அதிகாரத்துடன் நடத்துவது போல் இருக்கிறது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்