முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

சீமைக்கருவேல மரம்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, வேளாண்மைத்துறை, வீட்டுவசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், விளையாட்டுத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் கீழ் இயங்கும் பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் குளங்கள், ஏரிகள், கால்வாய் போன்ற பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை விரைந்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களின் தீமையை எடுத்துக் கூறி அவர்களுக்கு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விரைந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள், ஆற்றுப்படுக்கைகள், காவேரி கரையோரப் பகுதி, புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றிட வலியுறத்தப்பட்டது. இதில் தனியார் தொண்டு நிறுவனங்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களை இப்பணியில் ஈடுபட வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். மேலும் மாவட்ட முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது

சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இடத்தில் விரைவாக வளர்ந்து நிழல் தரக்கூடிய புங்கன், வேம்பு, வாகை, மகாகனி, வாதாம், போன்ற மர வகைகளை உடனடியாக நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், வருவாய் கோட்டாச்சியர்கள் ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்), ஜானகி (முசிறி), கோவிந்தராஜீலு (இலால்குடி), மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்