முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீவிர போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று (24.03.2017) நடைபெற்றது.

போலியோ மருந்து

 

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வருகின்ற 2.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு நாட்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,50,240 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

 

நகர பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும், ஆக மொத்தம் 1510 மையங்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. இப்பணிக்கு 6,040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு காலை 7.00 மணி முதல் சொட்டு மருந்து வழங்கப்படும்.

51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்து வீரியம் குறையாமல் குளிர்பதன தொடர் (ஊழடன உhயin) மூலம் பாதுகாக்கப்படுகிறது.

2.04.2017 அன்று பிறந்த குழந்தைகளுக்கும் மேலும் இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த போலியோ சொட்டு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது,.

வேலை நிமித்தமாக காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தற்காலிக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே, போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, அனைத்து ஆரம்ப சுகாதாரத மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்