முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 30 முதல் லாரி ஸ்டிரைக் 25 லட்சம் லாரிகள் பங்கேற்பு : காய்கறி விலை உயரும் அபாயம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை   -  டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து மார்ச் 30-ஆம் தேதி முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.டீசல் மீதான வாட் வரியை அண்மையில் தமிழக அரசு உயர்த்தியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருந்தது இந்நிலையில் டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம், 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வாகனங்கள் தடைவிதிக்கும் மத்திய அரசின் உத்தரவு ஆகியற்றை கண்டித்து வரும் மார்ச 30-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்ததத்தில் ஈடுபடவுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 12 லட்சம் லாரிகள் இயங்காது.இதனால் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய துறைமுகங்கள் பாதிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்