முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவாலின் பயணம் தீவிரவாத எதிர்ப்புப் போர் ஒத்துழைப்பை வலுவூட்டும்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளுக்கிடையில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மேலும் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும் என்று கருதப்படுகிறது.

2-வது முறையாக ...
இப்பயணத்தில் தோவால் பல்வேறு முக்கிய அதிகாரிகள், பாதுகாப்பு கமிட்டி தலைவர்கள் ஆகியோரை சந்தித்திருக்கிறார். டிரம்ப் வெற்றி பெற்றப் பிறகு தோவால் 2-வது முறையாக அமெரிக்கா போயிருக்கிறார்.  டிசம்பர் மாதத்தில் அவர் சந்தித்த ப்ளின் பதவி விலகிய பின்பு புதிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர் அவருடைய இடத்திற்கு வந்தார். தோவால் மெக்மாஸ்டரை சந்தித்தப் போது இரு நாடுகளும் பரஸ்பர தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க ஒத்துக்கொண்டன. உலகின் இரண்டு பெரிய ஜனநாயகங்கள் இணைந்து தீவிரவாதப் போரில் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதிகொண்டுள்ளன என்கிறார் வெள்ளை மாளிகை அதிகாரியொருவர்.

பேச்சுவார்த்தை
மெக்மாஸ்டர் இந்தியாவின் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிறார். அவருடன் தோவால் நடத்திய மூன்று சுற்று பேச்சுவார்த்தையில் இந்தியாவின் வளர்ச்சி, பிராந்திய விஷயங்கள், இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள், கடல் பிரதேச பாதுகாப்பு போன்றவையும் இடம் பெற்றன. அமெரிக்க அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் உட்பட பல

பிராந்திய பாதுகாப்பு
விஷயங்களில் தோவாலின் (இந்தியாவின்) கருத்துக்களை கூர்மையாக கவனித்ததாக ஓர் அதிகாரி தெரிவித்தார். விவாதங்களின் போது ஜி எஸ் டி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவை பற்றியும் அமெரிக்க அதிகாரிகள் பேசியது இந்தியா மீதான் அமெரிக்காவின் ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது என்றும் தகவல்கள் சொல்கின்றன. விவாதங்களில் பாகிஸ்தானின் தீவிரவாத ஊக்குவிப்பு செயல்கள் பற்றி ஏதும் தனியாக இடம் பெறாவிட்டாலும் பிராந்திய பாதுகாப்பு அம்சத்தில் இடம் பெற்றது என்கின்றனர் அதிகாரிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்