முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாந்தோன்றி, சனப்பிரட்டி பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்திற்காக கூடுதலாக ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது : மாவட்ட கலெக்டர் தகவல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் நகராட்சி, சனப்பிரட்டி, தாந்தோன்றி பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த கூடுதலாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

 

குடிநீர்

 

கரூர் நகராட்சி சனப்பிரட்டி, தாந்தோன்றி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக மூலக்காட்டானூர் பகுதியில் ரூ.1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வறட்சி காலத்தில் குடிநீரின் அளவு பற்றாக்குறையாக உள்ளதால் அதை ஈடுகட்டுவதற்காக மூலக்காட்டானூர் பகுதியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் 8.5’ ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு அதில் 20 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தி இதன் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மூலக்காட்டானூர் நீர் சேமிப்பு தொட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் அசோக்குமார், பொறியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்