முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடைய அனைவரும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு முன்வர வேண்டும் : இந்திய ரிசர்வ் வங்கி, உதவி மேலாளர் பாலு அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், உப்பிலியக்குடி கிராமத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.சுலைமான் தலைமையில் இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை கிளை உதவி மேலாளர் என்.பாலு முன்னிலையில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேண்டுகோள்

இந்த நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை கிளை உதவி மேலாளர் துவக்கி வைத்து பேசியதாவது:இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனைகள் பொதுமக்கள் அனைவரும் மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், உப்பிலியக்குடி கிராமத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறைகள், கைப்பேசியில் மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ளுதல், வங்கி சேவைகள் கடன் பெறுதல் மற்றும் கடனை முறையாக திருப்பி செலுத்தும் வழிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதே போன்று பொது மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கமளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்பட்டது. மேலும், கிராமிய கலைக்குழுவின் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது எனவே இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பொது மக்கள் அனைவரும் ரொக்கமில்லா மின்னணு பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை கிளை உதவி மேலாளர் என்.பாலு பேசினார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் கல்வி மைய ஆலோசகர் அ.முத்து, மாவட்ட திட்ட மேலாளர் புதுவாழ்வு திட்டம் வசுமதி, முதன்மை மேலாளர் (ஜ.ஓ.பி) அந்தோணிசாமி மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்