முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஆந்திர பெண் மகனுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மீது சந்தேகம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில் ஆந்திர பெண் மகனுடன் கொலை  செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கணவர் தான் இச்செயலில் ஈடுபட்டதாக அவருடைய பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் ஹனுமந்தராவ்– சசிகலா (வயது 40) தம்பதியர். இந்த தம்பதியருக்கு அனிஷ் சாய் என்று 7 வயதில் ஒரு ஆண் குழந்தை. ஹனுமந்தராவ் கடந்த 3 நாட்களுக்கு முன் வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனால் வீட்டில் மனைவியும், மகனும் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு பிணமாகக்கிடந்ததைத்தான் காண முடிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிகுந்த துயரம்
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன், சசிகலா, அனிஷ் சாய் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பர்சூர் தொகுதி எம்.எல்.ஏ., சாம்பசிவராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ‘டானா’ என்னும் வட அமெரிக்க தெலுங்கு சங்கத்தை வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் சீனிவாசும், வர்த்தகர் ஹர்னிஷ் பட்டேலும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது கம்ப்யூட்டர் என்ஜினீயர் சசிகலாவும், அவரது மகன் அனிஷ் சாயும் தங்களது வீட்டிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணவர் மீது சந்தேகம்
இந்நிலையில், உயிரிழந்த சசிகலாவின் பெற்றோர், சசிகலாவின் கணவரான ஹனுமந்த ராவ்தான் சசிகலாவைக் கொலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஹனுமந்த ராவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்துவந்ததாகவும் சசிகலாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார்
எனவே தங்களது மருமகனான ஹனுமந்த ராவ்தான் மகள் சசிகலாவையும் அவர்களது 7 வயது மகன் அனிஷ் சாயையும் கொலை செய்திருப்பதாக உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விஜயவாடா காவல்நிலையத்தில் ஹனுமந்த ராவ் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்