முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார துறையின் சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு பார்வையிடப்பட்டது.

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார துறையின் சார்பில்  தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட நல்லதங்காள் ஓடை மற்றும் உடையார்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர்,  ச.ஜெயந்தி   தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு பார்வையிடப்பட்டது.

செய்தியாளர் பயணத்தில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புணரமைத்திடும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்திடும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  13.03.2017அன்று காஞ்சிபுரம், மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்திலுள்ள மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டம் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்துப் பணிகள் செய்வதுதான் குடிமராமத்து பணிகள் திட்டமாகும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழக அரசால் தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்  அமராவதி பாசனத் திட்டத்தின் கீழ் 47 பணிகளுக்கு ரூ.102.84 இலட்சமும், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் 102 பணிகளுக்கு ரூ.565.80 இலட்சமும், குதிரையாறு திட்டத்தின் கீழ் 3 பணிகளுக்கு 6.10 இலட்சமும் மற்றும் கீழ்பவானி திட்டத்தின் கீழ் 5 பணிகளுக்கு 45.80 இலட்சமும் என 157 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.720.54 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் முத்து சமுத்திரம் பகிர்மானக் கால்வாயில்  தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தற்போது குடிமராமத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், குடிமராமத்துப் பணிகள் மூலம் முட்புதர்கள் மற்றும் சீமைக் கருவேலான் மரங்ளை வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர்வாருதல் கால்வாயின் கரைகளில் பலவீனமாக உள்ள இடங்களில் மண்கொட்டி அகலப் படுத்தி, கரைகளை பலப்படுத்துதல், பழுதடைந்த குறுக்கு கட்டுமான கட்டிடங்கள் புதுப்பித்தல், கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் முக்கியமானப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகியவை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளால் சீமைக்கருவேலான் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தூர்வாரப்படுவதன் மூலம் தண்ணீர் தங்கு தடையின்றியும் கரைகள் பலப்படுத்தப்படவுள்ளது. மற்றும் தடுப்புச் சுவர் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட உடையார்குளத்தில் குடிமராமத்து பணிகள் மூலம் 87.36 ஏக்கர் நிலங்களும் மற்றும் நல்லாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட குமாரபாளையத்தில் நல்லதங்காள் ஓடை கிளைக்கால்வாய் குடிமராமத்து பணிகள் மூலம் 4744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெற முடியும். இவ்வாறு குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4,15,775 ஏக்கர் பாசனப் பகுதிகள் பயணடையும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, எலுகாம்வலசு நல்லதங்காள் ஓடை நீர்த் தேக்க பரப்புகளில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவில் அகற்றப்பட்டிருந்த சீமைக்கருவேல மரங்களையும் மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டார்கள்.          

இந்நிகழ்வின் போது, அமராவதி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மு.கொளந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொ) மைக்கேல, உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்